பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் 3வது வாசிப்பு திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு கடந்த ஏப்பிரல் மாதம் 03ஆம் திகதி அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அத்துடன் கடந்த ஏப்பிரல் மாதம் 07ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் மீதான விவாதம் இன்று நாடளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பும் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் கொண்டுவரப்பட்ட திருத்தம் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 05 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் கொண்டுவரப்பட்ட திருத்தம் 09 மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
இறுதியாக, சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த மூன்றாம் வாசிப்பு மீதான வாசிப்பின்போது முன்வைத்த திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபதநாயகர் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சயாநாயகர் அறிவித்தார்.