இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த ரிஷி சுனக், தனது தேர்தல் பிரச்சார உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, பகவத் கீதையை வைத்து, பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதில் தான பெருமை அடைவதாகவும், நமது கடமையை உண்மையாகச் செய்ய வேண்டும் எனவும் ரிஷிக் சுனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைப்பதாகவும், இதை தனது அன்பான பெற்றோர் தனக்கு கற்று கொடுத்து வளர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தான் தனது பிள்ளைகளுக்கும் இதனை கற்று கொடுப்பதாகவும், பொது சேவை செய்ய தர்மம்தான் தனக்கு வழிகாட்டுவதாக பிரித்தானிய பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றமை குறித்து, கருத்து தெரிவித்த ரிஷி சுனக், எல்லோருக்கும் கிரிக்கெட்டில் மகிழ்ச்சியா?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அங் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி என ஆரவாரத்துடன் கைதட்டி பதிலளித்திருந்மை குறிப்பிடத்தக்கது.