பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.
இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார்.
யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன?
1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர்.
இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்.
பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது.
கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார்.
மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.
ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.
இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.