உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் தீவிர உதவியாளராக சீனா செயற்பட்டு வருவதாக நேட்டோ அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்காவின் வோஷிங்டென் நகரில் ஆரம்பமான நேட்டோவின் 75 வது ஆண்டு உச்சி மாநாட்டிலேயே குறித்த குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதன்போது”ரஷ்யாவின் இராணுவத் திறனைப் புதுப்பிக்க சீன அரசு ஆயுதங்கள், ஆயுத பாகங்கள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் என்பனவற்றை வழங்கி வருவதை நிறுத்த வேண்டும்” என நேட்டோ தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன் ரஷ்யாவுக்கு சீன அரசு செய்து வரும் உதவிகள் எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.