”பாதாள குழுவினரை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவது எமது பொறுப்பாகும்.
எனினும், கடந்த காலங்களில் பாதாள உலக்குழுவினரைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டபோது எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.
கடந்த காலங்களில் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது, போராட்டக்காரர்களுக்கு தினமும் பிரியாணி வழங்கப்பட்டது.
இதனை யார் வழங்கியது? இந்த பாதாள உலகக்குழுவினர்தான். அவர்களிடம்தான் இவ்வளவு பணம் இருக்கிறது. நாட்டில் போதைப்பொருள் மற்றும் வன்முறை கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்த்தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.