நாட்டில் இடைநிறுத்தப்பட்ட பழைய திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வீடமைப்பு, நிர்மாண மற்றும் நகர்ப்புறத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய உயர்மட்டக் குழுவினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இதன்போது ஐஆகு யின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைள் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளமை ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் மீதுஇ சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை அரசுடன் கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க தாம் எதிர்பார்த்திருப்பதாகவும்இ குறிப்பாக கடந்த ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜப்பானிய உயர்மட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.