நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீரியல் கொலை சம்பவத்தை விடவும் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட ஆடம் பிரிட்டன் என்பவர் ஆஸ்திரேலியாவில் விலங்கியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். 52 வயதாகும் இவரது வீடு டார்வின் பகுதியில் அமைந்துள்ளது.
விலங்கியல் நிபுணர் என்பதால் நாய்களிடம் நெருங்கி பழகிய அவர், சில நாய்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்து அவற்றிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நாய்களை பலாத்காரம் செய்த அவர், பின்னர் அவற்றை கொன்று பீப்பாய்களில் அடைத்து வைத்திருக்கிறார்.
இதேபோன்று ஆடம் பிரிட்டன் சுமார் 60 நாய்களை கொன்று குவித்துள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆடமை கைது செய்து விசாரணை நடத்திய பொலிஸார் அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர்.
இதில் ஆடமுக்கு பாராஃபிலியா எனப்படும் குழந்தைகளை தொந்தரவு செய்யும் மனநிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆடம் செய்த குற்றங்கள் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று அவரது மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவங்கள் ஆண்டுக்கணக்கில் நடந்த நிலையில், ஆடமை 2022 ஏப்ரலில் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆடம் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அவருக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் அவர், உயிரிழக்கும் வரையில் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.