ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் பொரளை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கொழும்பு நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ.டி.எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி முன்னெடுக்கப்பட்டது.
ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் அசோக்குமாரின் நெறிப்படுத்தலில் மேற்படி போட்டி இடம்பெற்றது.
இக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் வெற்றி ஈட்டிய அணியினருக்கு பணப்பரிசில்களையும்,வெற்றிக் கேடயங்களையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















