நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வடமேற்கு மாகாணத்தில் பல மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.