ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை மட்டுக்கலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பேருந்து சாரதி உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கொழும்பில் இருந்து அம்பேவெல அரச கால்நடை பண்ணைக்கு சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதாகவும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும்இ மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறும் லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.