ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தை நீக்க வேண்டும் என அக்கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி புதிய பொதுச்செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் கட்சி எடுத்துள்ள முடிவு மீளப்பெறப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை அmனுராதபுரம், கம்பஹா, மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களின் தொகுதி அமைப்பாளா்களான முறையே எஸ் சந்திரசேன, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் கஞ்சன விஜேசேகர,அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோா் நீக்கப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.