இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க (wanindu hasaranga) விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், வனிந்து ஹசரங்க (wanindu hasaranga) தனது 10 ஆவது ஓவரை வீசும்போது உபாதை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வனிந்து ஹசரங்கவிற்கு (wanindu hasaranga) பதிலாக ஜெப்ரி வென்டர்சே (wanindu hasaranga) அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.