பங்களாதேஸில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டுப் பிரதமா் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளது.
குறித்த வன்முறைகளில் இது வரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை பங்களாதேஸிற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தற்போது அங்கே இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை பங்களாதேசிற்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை தற்போதைய கூழ்நிலையில் பங்களாதேசில் இருக்கும் இந்தியர்களை தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவசர சூழ்நிலைகளின் போது டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளதோடு, இதற்காக தொலைபேசி எண்களையும் அவா்கள் வெளியிட்டுள்ளனர்.