ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் இருவர் சுயாதீன வேட்பாளர்களாக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்
இதன்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்
தம்மிக்க ரத்நாயக்கவினால் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து 9 வேட்பாளர்களும் சுயாதீனமாகப் போட்டியிடவுள்ள 6 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எல் ஏ எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அன்றைய தினம் அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.