ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர் என வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,
மக்கள் தேர்தலைப் பற்றி சிந்திக்கவில்லை. தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கூட சிந்திக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினார். அதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்” இவ்வாறு வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.