ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் இதுவரை 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 11 வேட்பாளர்களும்,
வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட 10 வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை 4 வேட்பாளர்கள் நேற்றையதினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சோஷலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான பாணி சிறிவர்தன கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.
அத்துடன், மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதன்படி, இதுவரையில் மொத்தமாக 22 ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசமும் எதிர்வரும் 14ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.