தரமற்ற மருந்து இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னிலையில் 2024 பெப்ரவரி 02 அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது