ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவினைத் தொிவித்தாா்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிசெய்வதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.














