இந்தியா – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அடுத்த மாதம் 3 ஆம், 10 ஆம் மற்றும் அக்டோபர் முதலாம் திகதி என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அக்டோபர் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்முகாஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட போவதாக பாஜக அறிவித்துள்ளது.