எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று முன்தினம் (19) வரையான காலப்பகுதிக்குள் 35 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜூலை 31 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 666 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமைக்கான 642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.