இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்துக்கு விஜயம் செய்துள்ளார்.
சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்லவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.
போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.