திராவிட அரசியலை அடியோடு ஒழிப்பதற்கு 2026 தேர்தல்தான் சரியான தருணம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளாா்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபேதாதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
அத்துடன், பிரதமர் மோடியைப்போலவே நடந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசைப்படுவதாகவும், இரண்டு திராவிடக் கட்சிகளை அகற்றவே தன்னை மாநிலத் தலைவராக நியமித்து உள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளாா்.
அத்துடன், 2024 தேர்தலில், ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா நிரூபித்துள்ளது எனவும், கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் தமது கட்சிக்கு உள்ளதெனவும் அவா் தொிவித்தாா்.
தி.மு.கவுடன் எப்போதும் பாரதிய ஜனதா கூட்டணி வைக்காது என்பதுடன், தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாரதிய ஜனதா முடிவு எடுக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மேலும் குறிப்பிட்டாா்.