நிறைவடைந்த இலங்கை – இங்கிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடுவர்களின் செயல் குறித்து ஏஞ்சலோ மேத்யூஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இதில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் போட்டியின் விதம் மாறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பந்தை மாற்றுவதற்கு போதுமான பழைய பந்து எதுவும் இல்லை என்று நடுவர்கள் தனக்கும் கமிந்து மெண்டிஸ் இற்கும் அறிவித்ததாக மேத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் பந்தை மாற்றும் போது சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நடுவர்களின் விருப்பத்திற்கேற்ப பந்தை மாற்றியதன் மூலம் போட்டியின் சாதகம் இங்கிலாந்து அணிக்கே சுழன்றதாகவும் அஞ்சலோ மெத்யூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.