ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தென்னிலங்கையைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதுடன், தமிழ் மக்கள் காட்டிய அந்த நல்லிணக்க செய்தியை ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையேனும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையிலே நாங்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிலே 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உள்ளார்கள். அதில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான பணிகளை நாங்கள் ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை, நிச்சயமாக இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு மற்றும் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருப்பதுடன், இதில் 50 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.