தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்ற வேட்பாளர்கள், ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”ஹம்பாந்தோட்டைக்கு இதற்கு முன்னர் வந்த போது எனது மேடையில் இருந்த பல அமைச்சர்கள் இன்று இல்லை.
எமக்கு ஆதரவளித்த பலரை அன்று ஜே.வி.பி.யினர் கொன்றுவிட்டனர். 2022 ஆம் ஆண்டில் நான் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.
அனுர, சஜித்திடம் உதவி கேட்டேன். அவர்கள் அனைவரும் என்னை வீழ்த்திவிட்டு செல்ல முற்பட்டனர்.
நாம் ஏற்படுத்திய நிலைத்தன்மையைப் பாதுகாக்கவே மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த நான்கு வருடங்களாக
இளையோருக்கு தொழில் கிடைக்கவில்லை.
50 ஆயிரம் பேருக்கு விருப்பமான தொழில் கல்வி பயிலவும் நிதி நிவாரணத்தை நாம் வழங்குவோம். 10 இலட்சம் பேருக்கு தொழில் தருவோம் என்று சஜித் அணியினர் பொய் சொல்லுவார்கள்.
செப்டெம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, துறைமுகமும் இருக்காது. தொழிற்சாலைகளும் வராது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.