எதிா்த்தரப்பினா் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தைத் தடுக்க முயற்சிக்கின்றனரே தவிர, நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதாக இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தொிவித்தாா்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”நாம் மக்களுக்கும் உரம் வழங்க முயற்சித்த வேலையில் ஜே.வி.பி. அதற்கு தடைபோட முற்பட்டது.
இன்று வெளிநாடுகளுக்கும் நாம் அரிசி விநியோகிக்கும் அளவிற்கு ஜனாதிபதி வழி செய்திருக்கிறார்.
மற்றைய கட்சிகள் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தைத் தடுக்க முயற்சிக்கின்றதே தவிர, நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதாக இல்லை என்பது தற்போது தெரிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கும் போது புதிய தலைவர்களைக் கொண்டு வந்து பரீட்சித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இதனை நாட்டு மக்கள் புரிதுந்துகொள்ள வேண்டியது அவசியம்” என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தொிவித்தாா்.