தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க ஒரே நாளில், 35,140 பேர் முன்பதிவு செய்ததால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை ஒக்டோபரை் 31ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில், அரசு விரைவு பேருந்துகளில், பயண நாளில் இருந்து, 60 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்தது.
அதன்படி கடந்த மாதம் 31லஆம் திகதி முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் ஒரு வாரத்தில், 70,000 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த,4 ஆம் திகதி மாத்திரம் 35,140 பேர் முன்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும்,
இது விரைவு பஸ் வரலாற்றில் புதிய சாதனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 2018 ஜன., 12ல் பொங்கல் பண்டிகையையொட்டி, 32,910 பேர் முன்பதிவு செய்ததே, ஒரு நாள் முன்பதிவு சாதனையாக இருந்த நிலையில் தற்போது இச்சாதனை முறியடிக்கப்பட்டதாக, விரைவு பஸ் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.