கல்லூரி மாணவர்களை இணையவழியில் ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக முன்னர் 13.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும், இம்முறை அது 3.5 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும் இதனால் அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒன்றரை வருடங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை எடுத்ததாகவும், இம்முறை 04 மாதங்களில் மிகக்குறுகிய காலப்பகுதியில் ஆட்சேர்ப்பை வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கல்விப் பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், 19 கல்லூரிகளையும் இணைத்து கல்விப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இறுதி வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.