80 வீத வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில்” புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. பரீட்சை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்குமாறு தேர்தல் வேட்பாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் அரச பணியாளர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் நாளையும் இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.எனவே இதுவரை வாக்களிக்காத அரச பணியாளர்கள் குறித்த இரண்டு தினங்களில் வாக்களிக்கமுடியும்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளைச் உறுப்பினர்களும் ஒரு சுயாதீன உறுப்பினரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தேர்தல் பிரசாரப் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவது குற்றமாகும்.அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.