”தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் கிடையாது” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளதாவது” தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.
தேர்தலில் தனிநபருக்கு சார்பாக மக்கள் தீர்மானம் எடுக்கமாட்டார்கள். நாடு தொடர்பாக சிந்தித்தே மக்கள் வாக்களிப்பார்கள். அநுர தனிப்பட்ட விளம்பரபிரசாரத்தினையே மேற்கொண்டுள்ளார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் காணப்பட்டது அநுரகுமார அப்போது எங்கிருந்தார்? நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை மேடைகளில் வழங்கி வருகின்றனர்.
சஜித் பிரேமதாச யாருக்கும் தொப்பி போடுபவர் அல்ல. அவருக்கு அவரே தொப்பியை போட்டுக்கொள்வார். தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டனர். ரணில்விக்ரமசிங்க மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் தொகுதிகளிலும் தேர்தலில் நூற்றுக்கு 85 வீத வெற்றிஉறுதிசெய்யப்பட்டுள்ளது ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.