கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து,எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வெளியிடப்பட்டது.
108 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸின் கொலை தொடர்பான விசாரணைக்கு 2023 டிசம்பரில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.