முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கைகள் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கருக்கலைப்புக்கு ஆதரவான கொள்கை என்பவற்றுக்காக போப் பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை (13) அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரையும் கடுமையாக சாடினார்.
மேலும் அமெரிக்க கத்தோலிக்கர்கள் வரவிருக்கும் அமெரிக்க தேர்தல்களில் “குறைவான தீயவர்” என்று யாரை நினைக்கிறார்கள் அவர்களை தேர்ந்தெடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
கருக்கலைப்பு என்பது மனித வாழ்க்கையை திட்டமிட்டு அழிப்பதாகும் என்ற கத்தோலிக்க திருச்சபையின் போதனையை அவர் ஆதரித்த அதே வேளையில், குடியேற்றம் உட்பட மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய பிற பிரச்சினைகளிலிருந்து அதை தனிமைப்படுத்த முடியாது என்றும் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
போப் முன்பு அரசியல் விவகாரங்களைப் பற்றி விவாதித்தார், குருக்கள் கருக்கலைப்புகளை மன்னிக்க அனுமதிப்பதன் மூலம் மேலும் முற்போக்கான நிலைப்பாடுகளை அடையாளம் காட்டினார், ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை அனுமதித்தார் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து எச்சரித்தார்.
ஆசியாவில் 12 நாள் சுற்றுப்பயணத்தை முடித்த போப் வெள்ளிக்கிழமை செய்தி மாநாட்டில் உரையாற்றும் போது இதனைக் கூறினார்.