நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி எதிர்வரும் நான்காம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது
முன்னதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்
இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள்குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இந்திய இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.