யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குறித்த கடிதத்தில்” யுத்தத்தினால் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை ஏற்று, அமைக்கப்படும் நினைவுத்தூபியானது முழு நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு நினைவேந்தலுக்கான அடையாளமாகவும் மாறும் எனவும் குறிப்பிட்டுளு்ளார்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும், இந்தச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதோடு, இழப்பீடு மற்றும் பிற வகையான ஆதரவை அணுகுவதற்கும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.