”சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி” கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு ப்லவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக சிவில் பெண்கள் அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சமூக ஆர்வலரும் சட்டத்தரணியுமான நிமல்கா பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்” அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலக்கு வைக்கப்பட்டார்.
சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக அவருக்கு பல வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அதிகரித்துச் செல்கின்றன.
இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம்”இவ்வாறு தெரிவித்துள்ளார்.