நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் விவசாய அமைச்சில் ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நேற்று காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலை நடத்திய பின்னர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
விவசாயம், காணி, நீர்ப்பாசனம், கால்நடை, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க, தெரிவிக்கையில், உரங்களை கொள்வனவு செய்யும் போது QR குறியீட்டு முறையை தயார் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் எனவும் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பெரும்போகத்தில் பயிரிடப்படும் 8 லட்சம் ஹெக்டேர்களுக்கு உரம் வழங்க அரசுக்கு 20 பில்லியன் ரூபாய் செலவாகிறது. விவசாயிகளின் தனிப்பட்ட கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.