சந்தையில் அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் முட்டையின் விலை கட்டுப்பாடின்றி மீண்டும் உயரக்கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை மீண்டும் 40 ரூபாயை தாண்டியுள்ளது.
இதேவேளை, நாட்டில் அதிகளவு முட்டை உற்பத்தி நடைபெறும் சூழலில் இடைத்தரகர்கள் முட்டைகளை சேமிப்பில் வைத்திருப்பதால் இந்த நிலை மோசமாக உள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.