நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறையும் ,கட்டுப்பணங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், உதவித் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் ஆகியோர் வேட்புமனுக்களை ஏற்கவுள்ளார்கள்.
அத்துடன் எதிர்வரும் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை இன்று நண்பகல் 12 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற சகல வாக்களார்களும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தபால்மூலம் வாக்களித்த வாக்காளர்களும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இம்முறை 2024ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு தேர்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது