ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் கடற்கரையில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் முனையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனின் இராணுவம் திங்கள் (07) அன்று கூறியுள்ளது.
இது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள எரிசக்தி வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் அண்மைய தாக்குதல் ஆகும்.
குடாநாட்டின் மிகப்பெரிய எண்ணெய் பதப்படுத்தும் வசதியான ஃபியோடோசியா முனையத்தின் மீது அந்நாட்டின் ஏவுகணைப் படைகள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியதாக கிய்வில் உள்ள உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.
தீயினால் ஃபியோடோசியாவிலிருந்து 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அரசு நடத்தும் Tass செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மொகோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரேனால் ஆல் ஏவப்பட்ட 21 ஆளில்லா விமானங்களில் 12ஐ ஒரே இரவில் தீபகற்பத்தில் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளது.