கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இம்மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.