பாகிஸ்தானில் வசிக்கும் சீனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பாகிஸ்தான் சீனாவிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் பாகிஸ்தானில் வசிக்கும் சீன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான பெரும்பாலான சீனர்கள் பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்.
பாகிஸ்தானில் செயல்படும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதன்படி, வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் பாகிஸ்தானின் நிலத்தையும், உழைப்பையும் சீனா அபகரித்து வருவதாக அந்தக் குழுக்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும், இந்த பின்னணியில் தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் சீன வாசிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் கராச்சி விமான நிலையம் அருகே சீன குடிமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தாம் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீனாவிடம் உறுதியளித்துள்ளார்.
சீனப் பிரதமர் லி குவாங் நேற்று (15) பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்துப் பேசியதுடன், தனது நட்பு நாடான சீனாவின் “பரிசு” என்ற வகையில் குவாதர் சர்வதேச விமான நிலையத்தை பாகிஸ்தான் பிரதமர் அறிமுகப்படுத்தியமையும் விசேட அம்சமாகும்.