வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் வெளிநாடு செல்வதை இத்தாலியின் நாடாளுமன்றம் புதன்கிழமை (16) சட்டவிரோதமாக்கியது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் யூரோக்கள் (£835,710) வரை அபராதம் விதிக்கப்படும்.
2022 இல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஜார்ஜியா மெலோனி, மிகவும் பழமைவாத சமூக நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி வருகிறார்.
இந்த நிலையில், தீவிர வலதுசாரி ஆளும் கட்சியால் முன்மொழியப்பட்ட சட்டமூலம் இத்தாலியின் செனட் சபையில் 58 க்கு 84 வாக்குகள் வித்தியாசத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் ஏற்கனவே கடந்த ஆண்டு கீழ் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.