முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வானது நேற்றைய தினம் இடம்பெற்றது.
ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்திருந்த ரஞ்சன் ராமநாயக்க,
“பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் எமது கட்சியின் அரசியல் செயற்பாட்டை முடக்குவதற்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பலர் முயற்சித்துவருகின்றனர்.”
“நான் உட்பட எனது தரப்பு வேட்பாளர்கள் நாடாளுமன்றமத் செல்வதை விரும்பாக ஒரு சிலர் சமூக ஊடகங்களில் வீண் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.”
“நான் உட்பட எனது கட்சியின் உறுப்பினர்கள் எவரும் கள்வர்கள் அல்ல. என்பதை எதிர்த் தரப்பினருக்கு தெரிவித்து கொள்கின்றேன்.”
“எமது கட்சியின் கொள்கை பிரகடனம் எமது கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.”
“நாம் நாடாளுமன்றம் செல்வதை விரும்பாதவர்களே இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.”
“ஏனெனில் நாம் ஊழலுக்கு எதிரானவர்கள். அதனாலேயே ஊழலுடன் தொடர்புடையவர்கள் நாம் நாடாளுமன்றம் செல்வதை எதிர்க்கின்றனர்.”
“நான் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் உண்மைக்காக குரல் கொடுத்தவன். நாங்கள் இனமத பேதமின்றி செயற்படுவோம், நாட்டுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எனது எதிர்ப்பார்ப்பாகும் என்றார்.”