கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
இந்த விமான நிலையம், பெரிய விமானங்களை முதல் முறையாக அங்கு தரையிறங்க அனுமதிப்பதுடன் – அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து நேரடி விமான சேவைகைளை இயக்கவும் வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிக்கட்டியால் மூடப்பட்ட மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட, கிரீன்லாந்து டென்மார்க் இராச்சியத்திற்குள் ஒரு பரந்த தன்னாட்சி பிரதேசமாகும்.
அதன் தலைநகரான நூக், தென்மேற்கு கடற்கரையில், 18,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு சிறிய நகரம்.
அங்குள்ளவர்கள் ஏனைய இடங்களுக்கு செல்லவதற்கு 35 இருக்கைகளை கொண்ட சிறிய ரக விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் எவரும் முதலில் இந்த விமானம் மூலமாக தலைநகருக்கு வடக்கே 200 மைல்கள் (319 கிமீ) தொலைவில் உள்ள கங்கர்லுசுவாக்கில் உள்ள முன்னாள் இராணுவ விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் அங்கிருந்து பெரிய விமானம் மூலம் ஏனைய நாடுகளுக்கு பயணிப்பார்கள்.
இரண்டாம் உலக மாகா யுத்தத்தின் போது, அமெரிக்கர்களால் இந்த ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டது.
தற்போது கிரீன்லாந்தில் பெரிய ஜெட் விமானங்களுக்கு போதுமான நீளமுள்ள இரண்டு ஓடுபாதைகளில் காங்கர்லுசுவாக் ஒன்றாகும்.
மற்றொன்று நாட்டின் தெற்கே உள்ள நர்சர்சுவாக், அதுவும் முன்னாள் அமெரிக்க இராணுவத் தளமாகும்.
இந் நிலையில் நவம்பர் மாதம் திறக்கப்படும் புதிய விமான நிலையம் மூலமாக, பெரிய விமானங்கள் முதன் முறையாக நுக்கில் தரையிறங்க முடியும்.