100 க்கும் மேற்பட்ட தொழில்முறை மகளிர் கால்பந்து வீரர்கள் குழு திங்களன்று (21) ஃபிஃபாவுக்கு (FIFA) ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சவுதி அராம்கோ (Aramco) உடனான கூட்டாண்மையை முடிவுக்கு கொண்டுவருமாறு உலக நிர்வாகத்திடம் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் விவியன்னே மீடெமா, கனடா தலைவர் ஜெஸ்ஸி ஃப்ளெமிங் மற்றும் முன்னாள் அமெரிக்க தலைவர் பெக்கி சாவர்ப்ரூன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்ட வீரர்களில் அடங்குவர்.
எதிர்கால ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் நெறிமுறை தாக்கங்களை மதிப்பிடுவதற்கு வீரர்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய மறுஆய்வுக் குழுவை அமைக்கவும் அவர்கள் முன்மொழிந்தனர்.
2026 உலகக் கிண்ணம் மற்றும் அடுத்த ஆண்டு மகளிர் உலகக் கிண்ணம் போன்ற முக்கிய போட்டிகள் உட்பட, அராம்கோ ஒரு உலகளாவிய பங்குதாரராக மாறுவதற்கு, FIFA வுடன் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டது.
சவுதி அரேபியா கடந்த சில ஆண்டுகளில் கால்பந்து, ஃபார்முலா ஒன் மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் அதிக முதலீடு செய்துள்ளது.
பொது நிதியானது விளையாட்டில் அதிக முதலீடுக்காக பயன்படுத்தப்படுவதனால், பெண்கள் உரிமைக் குழுக்கள் மற்றும் LGBTQ சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரின் விமர்சனங்களுக்கும் சவுதி அரேபியா ஆளாகியுள்ளது.