கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (21) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.61 ரூபாவாகவும், 297.60 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (18) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது 288.52 ரூபாவாகவும், 297.53 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்த அதேவேளை, மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக அதன் பெறுமதி அதிகரித்துள்ளது.