2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 759,210 எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மொத்த தபால் வாக்காளர்களின் எண்ணிக்கை 738,659 ஆக உள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தேவையான அனைத்து தபால் மூல வாக்குகளும் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது