சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று வாஷிங்டனில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரும் இலங்கை உள்ளிட்ட ஆசியா தொடர்பான கொள்கைத் தீர்மானங்களின் தலைவருமான கென்ஜி ஒகுமார தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியம் சார்பில் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர உள்ளிட்டோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.