எந்த ஒரு மாவட்டம் அல்லது நகரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பிரசாரம் மேற்கொள்ளப்படுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கூறியுள்ள அவர்,
உங்கள் மாவட்டம் அல்லது நகரத்தில் எந்த வகையான தேர்தல் பிரச்சாரத்திற்கும் டிஜிட்டல் திரை பயன்படுத்தப்பட்டால், தயவுசெய்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவும்.
அதன் பின்னர், அது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இது முற்றிலும் சட்டவிரோதமான செயல்.
விளம்பரங்களுக்கு பணம் செலுத்துவது அல்லது காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் இது பொது இடத்தில் போஸ்டர் ஒட்டுவதற்கு சமம்.
எனவே, டிஜிட்டல் திரையில் விளம்பரங்களை ஒளிபரப்புவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களின் போது, நீதிமன்ற தீர்ப்புகள் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தியதாகவும், தேவையானால் நீதிமன்றத்தை அணுகுவதற்கு அதிகாரிகள் உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.