கண்டி நகரம் உட்பட புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இந்திக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாயில் நேற்று திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் நீர் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் என மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.